உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நொய்யல் கரை ரோட்டில் சமூக விரோதிகள் அட்டகாசம்

நொய்யல் கரை ரோட்டில் சமூக விரோதிகள் அட்டகாசம்

திருப்பூர்: நொய்யல் ரோட்டில் அமைத்துள்ள தெருவிளக்குகள், பல மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராமல், காட்சிப்பொருளாக மாறியுள்ளன. திருப்பூர் மாநகராட்சியின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், நொய்யல் கரையோரம் புதிய வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய மண்பாதை அமைத்து ஆற்றின் இருபுறமும் தார்ரோடு அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் அதிகம்பயன்படுத்தும் அந்தரோட்டில், உயரமான கம்பங்கள் அமைத்து, தெருவிளக்கும் பொருத்தப்பட்டுள்ளது. அதற்கான மின்சார ஒயரிங் பணிகளும் முடிந்துவிட்டன. பல மாதங்களாகியும், எந்தவொரு பகுதியிலும் தெருவிளக்கு எரிவதில்லை. மாறாக, காட்சிப்பொருளாக மாறியுள்ள தெகருவிளக்குளில் இருந்து, 'கன்ட்ரோல் பாக்ஸ்' காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. பொதுமக்கள் கூறுகையில், 'நகரப்பகுதியில் நெரிசலில் சிக்காமல், எளிதாக சென்றுவர, நொய்யல் கரையோர ரோடுகள் பயனுள்ளதாக இருக்கின்றன. இருப்பினும், பாம்பு நடமாட்டம் அதிகம் என்பதால், பகல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தி வருகிறோம். தெருவிளக்கு பொருத்தி, பல மாதங்களாகியும், இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆங்காங்கே நடக்கும் விபரீதங்களை பார்க்கும் போது, இவ்வழியாக சென்றுவர, தெருவிளக்கு மிக மிக அவசியம். போலீசாரும், இவ்வழியாக ரோந்து சென்றுவர வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை