உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இயற்கையை காப்போம் நிகழ்ச்சி: கதிரவன் பள்ளி மாணவருக்கு பாராட்டு

இயற்கையை காப்போம் நிகழ்ச்சி: கதிரவன் பள்ளி மாணவருக்கு பாராட்டு

திருப்பூர்:திருப்பூர் அருகேயுள்ள அறிவியல் பூங்காவில், மங்கலம் கதிரவன் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் நடத்திய கலைநிகழ்ச்சி, பொதுமக்களின் பாராட்டை பெற்றது.'சுற்றுச்சூழல் பாதுகாப்போம்: இயற்கை வளம் காப்போம்,' என்னும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு வர 2ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இடுவாய், சின்னக்காளிபாளையத்தில் உள்ள அறிவியல் பூங்காவில் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.அதில், பஞ்ச பூதங்களையும் காக்கும் வகையில் மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி இருந்தது. மரங்களை அளிப்பதால் உண்டாகும் தீமைகளை நாடக வடிவில் அழகாக அரங்கேற்றினர்.சுகாதாரமான சத்துள்ள உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என்பதையும் பிற உணவுகளை உண்பதால் ஏற்படும் தீமைகளையும் சிறு குழந்தைகள் அழகாக எடுத்துக் கூறியது அனைவரது பாராட்டையும் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை