உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டில் வீசப்பட்ட பொருட்கள் கேரளாவிலிருந்து வந்த கழிவுகளா?

ரோட்டில் வீசப்பட்ட பொருட்கள் கேரளாவிலிருந்து வந்த கழிவுகளா?

பல்லடம்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இருந்து உடுமலை, பொள்ளாச்சி மற்றும் கொச்சி செல்லும் ரோடுகள் கேரள மாநிலத்தை இணைக்கின்றன. இவ்வழியாக, கன்டெய்னர்கள், சரக்கு வேன்கள், கனரக வாகனங்கள், லாரிகள் உள்ளிட்டவை அதிகளவில் சென்று வருகின்றன. பல்லடம் - பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், ஆள் அரவமற்ற காட்டு பகுதிகளில், ஏராளமான கழிவுகள், குப்பை கொட்டப்பட்டுள்ளன.பல்லடம் --------- பொள்ளாச்சி ரோடு, புளியம்பட்டி பிரிவு அருகே, காலாவதியான பாக்கெட் உணவு பொருட்கள், தின்பண்டங்கள் உள்ளிட்டவை குவியலாக ரோட்டோரத்தில் கொட்டப்பட்டுள்ளன. அரிசி, பருப்பு, எண்ணெய், ஊறுகாய் பாட்டில்கள், அப்பளம், பிஸ்கட் பாக்கெட்டுகள், பொரி உள்ளிட்ட ஏராளமான உணவு பொருட்கள், தின்பண்டங்கள் குவியலாக வீசப்பட்டுள்ளன. இவை, 2022, 23ம் ஆண்டிலேயே காலாவதி ஆனதாக தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. வியாபாரம் செய்பவர்கள் யாரேனும் இவற்றை வீசி சென்றனரா அல்லது கேரள மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கழிவுகளா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.ரோட்டோரத்தில் குவியலாக வீசப்பட்டுள்ள இந்த உணவு பொருட்களை, இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். சிலர், இவற்றிலுள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட கெடாத பொருட்களை எடுத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை