திருப்பூர்:திருப்பூர் நிட்டிங் பிரிவினருக்கு, நீண்டகால பயன்பாட்டுக்காக, சீனாவின் பையுவான் நிறுவனத்தின் நிட்டிங் மெஷின்களை வழங்கி வருகிறது, ஏ.ஆர்.ஆர்.கே., டெக்ஸ் மேக்' நிறுவனம்.திருப்பூர் பனியன் தொழில்துறைக்கு, கடந்த ஏழு ஆண்டுகளாக 260க்கும் அதிகமான நிட்டிங் மெஷின்களை வழங்கியிருக்கிறது இந்நிறுவனம். கடந்த, 40 ஆண்டுகளாக பையுவான் நிட்டிங் மெஷின்கள் திருப்பூருக்காக ஓடிக்கொண்டிருக்கின்றன.பையுவான் நிறுவனத்துக்கான அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் முகவராக, ஏ.ஆர்.ஆர்.கே., டெக்ஸ் மேக் நிறுவனம் சேவையாற்றி வருகிறது. தற்போதுள்ள புதிய தொழில்நுட்பத்துடன், மற்ற மெஷின்களை காட்டிலும் குறைந்த விலையில் மெஷின்களை வழங்கி வருகிறது.ஏ.ஆர்.ஆர்.கே., டெக்ஸ் மேக் நிறுவன நிர்வாக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,''சிங்கிள் ஜெர்சி அதிவேக நிட்டிங் மெஷின்கள், சர்குலர் நிட்டிங் மெஷின்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. அதாவது, 26 முதல் 36 ஜி.எஸ்.எம்., தரத்தில் துணி உற்பத்தி செய்யும். 40 டயாவுடன், 26 ஆர்.பி.எம்., வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைத்துள்ளோம்.எங்களது வாடிக்கையாளருக்கு, நிட்டிங் மெஷின் இயக்கத்தில் ஏதாவது சந்தேகம் அல்லது புகார் என்றாலும், வீடியோகால் மூலமாகவே சரிபார்த்து, உடனுக்குடன் சர்வீஸ் கொடுத்து வருகிறோம்,'' என்றார்.ஏ.ஆர்.ஆர்.கே., டெக்ஸ் மேக் நிறுவனம், தங்களது கண்காட்சி அரங்கை பார்வையிடும் பார்வையாள ருக்கு, மரக்கன்றுகளை பரிசாக வழங்கி அசத்தி வருகிறது.