உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கலை போட்டிகள்; மாணவர்கள் ஆர்வம்

கலை போட்டிகள்; மாணவர்கள் ஆர்வம்

திருப்பூர்; 'நிப்ட்- டீ' கல்லுாரியில் ஆண்டுதோறும், கல்லுாரிகளுக்கு இடையேயான கலை போட்டிகள்,' இக்னீஷியா' நடந்து வருகிறது; இந்தாண்டுக்கான போட்டிகள் நேற்று துவங்கியது; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த, 25 கல்லுாரிகளை சேர்ந்த குழுவினர் பங்கேற்றனர். கல்லுாரி இணை செயலாளர் மோகன்குமார், கலை போட்டிகளை துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் கோபால கிருஷ்ணன், கல்லுாரி கல்வித்தலைவர் சம்பத், 'வால்ரஸ்' நிறுவன மேலாளர் ஜான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி மாணவர், மாணவியர்கள், கலை போட்டிகளில் பங்கேற்றனர். 'முக ஓவியம்', மெஹந்தி போட்டி, நகத்தில் வரையும் போட்டி, மாணவியர் சிகை அலங்கார போட்டி, குறும்படம் தயாரிப்பு, நெருப்பில்லாமல் சமைக்கும் போட்டி, வினாவிடை, போட்டோ கிராபி, டிசைனிங் போட்டி, தனி நடனம், வசனமில்லாத நடாகம் உட்பட, 13 நிகழ்ச்சிகள் நடந்தன. குறிப்பாக, மாணவ, மாணவியர் சொந்தமாக டிசைன் செய்தபடி ஆடைகள் தயாரித்து, அவர்களே அணிந்து வந்து, பார்வையாளர்களின் பாராட்டுக்களை பெற்றனர். இன்று, குழு நடனம், பேஷன் ேஷா நிகழ்ச்சிகள் நடக்கும்; மாலையில், பரிசளிப்பு விழா நடக்குமென, கல்லுாரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி