மேலும் செய்திகள்
அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா
10-Aug-2025
ரோட்டரி உதவி வழங்கல்
07-Aug-2025
திருப்பூர்; திருப்பூர் மெட்டல் டவுன் ரோட்டரி சங்கம், 'சக்ஷம்' அமைப்பு இணைந்து, மாற்றுத் திறனாளிகள் 17 பேருக்கு நேற்று மொத்தம் 1.36 லட்சம் ரூபாய் மதிப்பிலான செயற்கை கால்கள் மற்றும் காலிபர்கள் வழங்கப்பட்டன. ரோட்டரி சங்கத்தலைவர் பூபதி, 'சக் ஷம்' மாவட்ட தலைவர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் சண்முகசுந்தரம், சக் ஷம் அமைப்பு செயலாளர் தமிழ்செல்வம் உள்ளிட்டோர் கலந்து ெகாண்டனர். சிறப்பு விருந்தினராக ரோட்டரி கவர்னர் தனசேகர், முன்னாள் கவர்னர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். செயற்கை கால் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க நிதியுதவி வழங்கிய நன்கொடையாளர்கள்; உலக மூத்த குடிமக்கள் தினத்தையொட்டி மூத்த குடிமக்கள் கவுரவிக்கப்பட்டனர். பொருளாளர் வேலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
10-Aug-2025
07-Aug-2025