உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செயற்கை அவயம் வழங்கல்

செயற்கை அவயம் வழங்கல்

திருப்பூர: திருப்பூர் குமரன் ரோட்டரி, சக் ஷம் அமைப்பு சார்பில், 13 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம் மற்றும் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.திருப்பூர் மாவட்ட சக் ஷம் அமைப்பு, திருப்பூர் குமரன் ரோட்டரி சங்கம் சார்பில், கடந்த மாதம், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் அளவீட்டு முகாம் நடந்தது. அளவீடு செய்த, 13 மாற்றுத்திறனாளிகளுக்கு, 81 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செயற்கை கால்கள் மற்றும் சக்கர நாற்காலி நேற்று முன்தினம் வழங்கப்பட்டன.மங்கலம் ரோடு, வீனஸ் கார்டன் குமரன் ரோட்டரி அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமையில் நடந்த விழாவில், செயலாளர் தமிழ்செல்வம், ரோட்டரி சங்க செயலாளர் சரவணகுமார் முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்ட கவர்னர் சுரேஷ்பாபு, உபகரணங்களை வழங்கினார். ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த்ராம், உதவி கவர்னர் அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை