புத்தக விழாவில் கலைநிகழ்ச்சி
திருப்பூர் : திருப்பூரில் நடந்த புத்தகத் திருவிழாவில்டி.கே.டி., குளோபல் பப்ளிக் பள்ளி (சி.பி. எஸ்.இ.,) மாணவர்கள், கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். பரதநாட்டியத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. பழங்குடியின மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பழங்குடியினர் நடனம், மாவட்டத்தின் பெருமையை விளக்கும் வில்லுப்பாட்டு, வானியல் துறை வெற்றிகளை சிறப்பிக்க மேற்கத்திய நடனம், சிலம்பத்துடன் தற்காப்புக்கலை திறன் வெளிப்பாடு, நாட்டுப்புற நடனம், ராணுவ நடனம் உள்ளிட்டவை இடம்பெற்றன. மாணவர்களின் பல்துறைத்திறன் பார்வையாளர்களை ஈர்த்தது.