ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
திருப்பூர்; எஸ்.பெரியபாளையம் ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, 11 துவங்கி, 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையம், ஆவுடைநாயகி உடனமர் சுக்ரீஸ்வரர் கோவில், நான்கு யுகங்களாக அருள்பாலிப்பதாக ஐதீகம். இரண்டாவது யுகத்தில், இலங்கை செல்லும் வழியில், சுக்ரீவன் இங்கு வழிபட்டதாக தலபுராணங்கள் கூறுகின்றன. மூன்றாவது யுகத்தில், வெள்ளை யானையாகிய ஐராவதம் வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன.ஆண்டுதோறும், ஆருத்ரா தரிசன விழா இக்கோவிலில், சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், வரும், 11ம் முதல், 13 தேதி வரை, சிறப்பு வழிபாடுகள் நடக்க உள்ளன. 11ம் தேதி, ஊர் எல்லையில் உள்ள, ஸ்ரீமுகுந்தபுரி அம்மனுக்கு, சிறப்பு ேஹாமம் மற்றும் அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்க உள்ளது. 12ம் தேதி காலை, 8:00 மணி முதல், 10:00 வரை, வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசை தட்டு எடுத்துவரப்பட்டு, ஸ்ரீநடராஜர் மற்றும் சிவகாமியம்மனுக்கு, மகா அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜையும், காலை, 11:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது.வரும், 13ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு கணபதி பூஜை, கலசஸ்தாபனம், ஸ்ரீருத்ர ேஹாமம், 108 கலச பூஜை, 108 சங்குபூஜை, நிறைவேள்வி நடக்கிறது. தொடர்ந்து, 7:30 மணிக்கு, ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது.தொடர்ந்து, சுவாமி திருவீதியுலாவும், காலை, 10:00 மணி முதல் அன்னதானமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, ஊர்பொதுமக்களும், ஆருத்ரா அன்னதான குழு அறக்கட்டளையும் செய்து வருகிறது.இதேபோல, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில், திருமுருன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில், திருப்பூர் மற்றும் நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில்களில், வரும் 13ம் தேதி அதிகாலையில், ஆருத்ரா தரிசன அபிேஷகம் மற்றும் மகாதரிசன விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.