உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.1.10 லட்சம் திருடிய ஆசாமி ஓட்டம் அதிகாரி எனக்கூறி கடையில் கைவரிசை

ரூ.1.10 லட்சம் திருடிய ஆசாமி ஓட்டம் அதிகாரி எனக்கூறி கடையில் கைவரிசை

பல்லடம்,: துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் முருகன், 65. பல்லடம் அடுத்த, ராசாகவுண்டம்பாளையத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். அங்கு மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை, ஸ்கூட்டரில் வந்த டிப்டாப் ஆசாமி ஒருவர், கடையில் இருந்த முருகன் மனைவி பூங்கனியிடம், பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் பாக்கு கேட்டுள்ளார். இதை எடுத்து கொடுத்த பின், 'நான் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி; கடையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் நெகிழி பைகள் உள்ளிட்டவை இருப்பது தெரியும். மாணிக்காபுரத்தில் உள்ள கடைகளில் சோதனை செய்துவிட்டு, அதிகாரிகள் குழுவினர் இங்கு வந்து கொண்டுள்ளனர். இதற்குள், உங்கள் கடையில் சோதனையிட வேண்டும்' என்று கூறி, கடைக்குள் சென்று ஆய்வு செய்துள்ளார். பொருட்களையெல்லாம் வெளியில் எடுக்குமாறு பூங்கனியிடம் கூறிய அந்த நபர், கல்லாபெட்டியில் இருந்த, 1.10 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பினார்.மாலை கடைக்கு திரும்பிய முருகன், கல்லாவை திறந்து பார்த்த பிறகே, பணம் திருடப்பட்டது தெரியவந்தது. பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாணிக்காபுரத்தில் உள்ள ஒரு கடையிலும் இதே போல் அதிகாரி என்று கூறி, இந்த மோசடி நபர் ஆய்வு செய்துள்ளார். அங்கு, எதுவும் கிடைக்காத நிலையில் இங்கு கைவரிசையை காட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை