விருப்பப் பாடமாக ஜோதிடம் ஜோதிடர் மாநாட்டில் தீர்மானம்
அவிநாசி : அவிநாசி மேற்கு ரத வீதியில் குலாலர் திருமண மண்டபத்தில் அகில இந்திய தொழில்முறை ஜோதிடர்கள் சங்கம் சார்பில் 14வது ஜோதிட மாநாடு நடந்தது. துணைப் பொதுச் செயலாளர் விஸ்வநாதன் வரவேற்றார்.துணைத் தலைவர் நந்தா துரைசாமி நிகழ்ச்சிகளை தலைமை தாங்கினார். துணைப் பொருளாளர் பானுமதி சந்திரசேகர் வாழ்த்துரை வழங்கினார். பொதுச்செயலாளர் மீனாட்சி திருநிறைச்செல்வன், புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தினேஷ் சுப்பையன், ஜோதிடர்கள் குடும்ப நல சங்க பொதுச்செயலாளர் வேணுகோபால், பொருளாளர் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.ஜோதிடர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை, சான்றிதழ் வழங்கப்பட்டது. ஜோதிடத்தை அனைத்து அரசு கல்லுாரிகளிலும் விருப்ப பாடமாக கொண்டு வர வேண்டும். ஜோதிடர்களுக்கான நல வாரியம் அமைக்க வேண்டும். நலிந்த ஜோதிடர்களுக்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்குவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க தலைவர் செல்வராஜ் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.