உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சஹோதயா தடகளப்போட்டி; ஆலயா அகாடமி அபாரம்

சஹோதயா தடகளப்போட்டி; ஆலயா அகாடமி அபாரம்

திருப்பூர்; திருப்பூர், 'சஹோதயா' குழந்தைகள் தடகளப்போட்டி, மவுன்ட் லிட்டரா ஜீ பள்ளியில் நடந்தது. மொத்தம் 31 பள்ளிகள் பங்கேற்ற போட்டியில் திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஆலயா அகாடமி மாண்டிசோரி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ, மாணவியர் பல்வேறு பரிசுகளைத் தட்டிச்சென்றனர். பவின்சர்வேஷ் (நின்ற இடத்தில் இருந்து தாண்டுதலில் முதலிடம்; வலைப்பந்து எறிதலில் மூன்றாம் இடம்); தேவ் (வலைப்பந்து எறிதலில் இரண்டாம் இடம்), ஸ்ரீது (60மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் முதலிடம்); சஷ்டிகா (60மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் மூன்றாம் இடம்); மிதுலாஸ்ரீ (60மீ., ஓட்டத்தில் மூன்றாம் இடம்); மிதுலாஸ்ரீ, சஷ்டிகா, ஸ்ரீது, மகிழ்(4 x 30மீ தொடர் ஓட்டத்தில் இரண்டாம் இடம்), பவின் சர்வேஷ், அத்விக், யஷ்வின், அவுனிக் அதிபன் (4 x 30மீ., தொடர் ஓட்டத்தில் மூன்றாம் இடம்). ஆறு புள்ளிகள் பெற்ற பவின்சர்வேஷ், ஐந்து புள்ளிகள் பெற்ற ஸ்ரீது தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை