மேலும் செய்திகள்
பெண் போலீசிடம் தகராறு ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு
02-Jun-2025
பல்லடம்; பல்லடம் வட்டார பகுதி யில், நுாற்றுக்கணக்கான ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. புதிதாக ஆட்டோ ஓட்ட நினைப்பவர்களுக்கும், ஏற்கனவே ஆட்டோ இயக்கி வருபவர்களுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன.ஆட்டோ ஓட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஸ்டாண்டில் ஆட்டோக்கள் நிறுத்த இடம் இன்றி பிரச்னை ஏற்படுகிறது. நேற்று, பல்லடம், கணபதிபாளையம் செல்லும் ரோட்டில், இருதரப்பு ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.பொது இடங்களில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவது நீண்ட காலமாகவே முறைப்படுத்தப்படாமல் உள்ளது. இது, ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே மோதல் போக்கை உருவாக்கி வருகிறது. எனவே, ஆட்டோ ஸ்டாண்டுகளை முறைப்படுத்த வேண்டும்.
02-Jun-2025