உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளியில் வித்ய விருது விழா; மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

பள்ளியில் வித்ய விருது விழா; மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

உடுமலை; கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா சர்வதேச பள்ளியில் வித்ய விருது விழா நடந்தது.கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா சர்வதேச பள்ளியில் நடந்த வித்ய விருது விழாவில் மாணவி ஜீவிகா வரவேற்றார். பொறியாளர் இந்துஜா முன்னிலை வகித்தார்.தொடர்ந்து மழையின் சிறப்பு, கிராம வாழ்வு, விவசாயத்தின் மேன்மை, அலைபேசியின் தீமைகள் உள்ளிட்டவற்றை கருப்பொருளாகக்கொண்டு, பல்வேறு கலைநிகழ்ச்சிகளை மாணவர்கள் நிகழ்த்தினர்.தமிழாசிரியர் ஜெயந்தி ஆண்டறிக்கை வாசித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவி காவியா நன்றி தெரிவித்தார்.பள்ளி தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், மெட்ரிக் பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன், சர்வதேச பள்ளி முதல்வர் பிரான்ஸிலின்டாலி மற்றும் ஆசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை