உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாதனைப் பெண்களுக்கு விருது

சாதனைப் பெண்களுக்கு விருது

திருப்பூர்: திருப்பூர் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லுாரியில் 25 ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு பல துறைகளில் சாதித்த திறமையான 25 பெண்களுக்கு 'சில்வெஸ்டா அக்னி சிறகுகள் விருதுகள்' வழங்கும் விழா நடந்தது. கல்வி, விளையாட்டு, மகளிர் மேம்பாடு, குழந்தைகள் சேவை, சமூக சேவை உள்ளிட்ட பல துறைகளில் சிறந்து விளங்கும் திருப்பூரை சேர்ந்த 25 பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 'புதியன விரும்பு' தலைப்பில் சிறப்புரையாற்றினார். பிறகு விருதுகள் வழங்கி, விருதாளர்களைப் பாராட்டி பேசினார். கல்லுாரி செயலர் அருள்சீலி, முதல்வர் சகாய தமிழ்ச்செல்வி, வாழ்த்துரை வழங்கினர். விழாவில் பெற்றோர், மாணவிகள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவிகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ