உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அங்கன்வாடியில் சேர்க்கை பதிவுக்கு விழிப்புணர்வு

அங்கன்வாடியில் சேர்க்கை பதிவுக்கு விழிப்புணர்வு

உடுமலை: உடுமலை அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளை சேர்க்க பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.அரசுப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு, அங்கன்வாடிகளும் அடிப்படையாக உள்ளன. அங்கன்வாடிகளில் அதிக குழந்தைகள் சேர்ப்பது, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர் சேர்க்கையிலும் எதிரொலிக்கிறது.இதனால், அங்கன்வாடிகளிலும் கட்டமைப்பு முதல், பாடத்திட்டம் வரை, புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.குழந்தைகள் விளையாடுவதற்கு, புதிய உபகரணங்களும் வழங்கப்படுகின்றன. இவற்றை, பெற்றோரிடம் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு, குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், உடுமலை சுற்றுப்பகுதி அங்கன்வாடி பணியாளர்கள் இரண்டு முதல் மூன்று வயதுள்ள குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு, மையங்களின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை