உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு

உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு

உடுமலை, ;உடுமலையில் உணவு பாதுகாப்பு துறை சார்பில், சாலையோர உணவு கடை நடத்துபவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.உடுமலையில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில், சாலையோர உணவு கடை நடத்துபவர்களுக்கான விழிப்புணர்வு முகாம், உணவு பாதுகாப்பு சட்டங்கள், உணவு பாதுகாப்பு பயிற்சி, உணவு பாதுகாப்பு துறை பதிவு சான்றிதழ் பெறுவதற்கான சிறப்பு முகாம் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.திருப்பூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை தலைமை வகித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர் கோடீஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர், மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.உணவு பாதுகாப்பு துறையின் செயலியை பதிவிறக்கம் செய்யவும், உணவு பாதுகாப்பு துறை அறிவுரைகளை பின்பற்றவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், சாலையோர உணவு கடை நடத்தும், 232 பேரிடமிருந்து பதிவு சான்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை