லஞ்சம் கேட்டால் துணிந்து நில் மாணவியருக்கு விழிப்புணர்வு
திருப்பூர்: அக்., 27ல் துவங்கி நவ., 2 ம் தேதி வரை, 'நம் அனைவரின் பொறுப்பு' எனும் தலைப்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளில் லஞ்ச ஒழிப்பு வார உறுதிமொழி ஏற்பது, கட்டுரை போட்டி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் பங்கேற்றார். அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு போலீசாரை தொடர்பு கொள்ளுங்கள் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.