பூ மார்க்கெட்டில் துர்நாற்றம் / நல்லுார் ரோட்டில் குளம் கழிவுகளால் அவலம்: வாகன ஓட்டிகள் அச்சம்
திருப்பூர்;குப்பை கழிவுகள் முறையாக அகற்றாமல் குவிந்து கிடப்பதால், பூ மார்க்கெட் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான பூ மார்க்கெட் வளாகம், ஈஸ்வரன் கோவில் வீதியில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இது தவிர இதன் சுற்றுப்பகுதியிலும் ஏராளமான பூ மற்றும் பழ விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. தினமும் அதிகாலை முதல் இரவு வரை இந்த பகுதி முழுவதும் பரபரப்பாக வர்த்தகம் நடைபெறும். இந்த பூக்கடைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், வளாகத்தின் பின்புறம் உள்ள அறிவொளி வீதியில் கொட்டப்படுகிறது.அவ்வகையில் தினமும் பல டன் எடையிலான மக்கும் கழிவுகள் சேகரமாகி, கழிவுகள் முறையாக அகற்றாமல் தேங்கி கிடக்கிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு மற்றும் ஈக்களின் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, பூ மார்க்கெட் வளாகம் உரிய வகையில் தினமும் குப்பைகள் அகற்றப்பட மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.