உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பழமையான கோவிலில் வரும் 21ல் பாலாலயம்

பழமையான கோவிலில் வரும் 21ல் பாலாலயம்

உடுமலை : பழமை வாய்ந்த மூவர் கண்டியம்மன் கோவில் திருப்பணிகளை மேற்கொள்ள, பாலாலய விழா வரும், 21ம் தேதி நடக்கிறது.குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டியில் பழமை வாய்ந்த மூவர் கண்டியம்மன் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் பெருங்கற்காலத்தை சேர்ந்த பல்வேறு பொருட்கள் மேற்பரப்பு ஆய்வில் கண்டறியப்பட்டது. அத்தகைய தொன்மை வாய்ந்த கோவிலை புதுப்பித்து, கும்பாபிேஷகம் நடத்த வேண்டும் என சுற்றுப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.சமீபத்தில், ஹிந்து அறநிலையத்துறை சார்பில், கோவில் விமானம் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, வரும், 21ம் தேதி பாலாலய விழா நடைபெற உள்ளது. அன்று அதிகாலை, 4:30 மணி முதல் மங்கள இசை, திருவிளக்கு வழிபாடு, விநாயகர் வழிபாடு, புண்ய தீர்த்த பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.காலை, 6:00 மணிக்கு மேல், 7:00 மணிக்குள் மூவர் கண்டியம்மன், சுற்று தெய்வங்கள், கோபுரங்கள், ராஜகோபுரம் பாலாலயம் செய்து, சிறு கோவிலில் எழுந்தருள செய்தல் நடைபெறும். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை