உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மகளிர் குழுக்களுக்கு ரூ.72 கோடி வங்கி கடன்

மகளிர் குழுக்களுக்கு ரூ.72 கோடி வங்கி கடன்

திருப்பூர், : சுய உதவி குழுக்கள் தின விழாவில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 781 குழுக்களுக்கு, 72 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் ஜூன் 3, சுய உதவி குழுக்கள் தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது. சென்னையில் நேற்று நடந்த சுய உதவி குழுக்கள் தின விழாவில், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். திருப்பூர் மாவட்டத்தில், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விழா நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக, துணை முதல்வர் துவக்கிவைத்தார்.டி.ஆர்.ஓ., ஜெய்பீம், மகளிர் சுய உதவி குழுவினருக்கு, வங்கி கடன் வழங்கினார். மொத்தம் 781 மகளிர் குழுக்களுக்கு, 72 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டது.மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஊரக வளர்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மகளிர் திட்ட இயக்குனர் சாம்சாந்தகுமார், மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) துர்கபிரசாத், உதவி திட்ட அலுவலர் கவுதமன் உள்பட அதிகாரிகள், மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ