உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பி.ஏ.பி. வாய்க்கால் சீரமைப்பு அமைச்சர்கள் ஆய்வு

 பி.ஏ.பி. வாய்க்கால் சீரமைப்பு அமைச்சர்கள் ஆய்வு

பல்லடம்: பல்லடத்தை அடுத்த, வாவிபாளையம் கிராமத்தின் வழியாக செல்லும் பரம்பிக்குளம் -ஆழியாறு - பி.ஏ.பி. பாசன திட்ட பிரதான கால்வாயின் ஒரு பகுதி, நேற்று முன்தினம் காலை திடீரென உடைந்தது. இதனையடுத்து, உடைந்த பகுதி வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி, விவசாய நிலங்களுக்குள்ளும், குடியிருப்புகளையும் சூழ்ந்தது. அதனை தொடர்ந்து, வாய்க்கால் சீரமைப்பு பணிகள் நடந்தன. இதனை நேற்று அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி மற்றும் கலெக்டர் மனிஷ் நாரணவரே ஆகியோர் ஆய்வு செய்தனர். பணிகள் முடிக்க ஆகும் காலம் மற்றும் பணிகள் முடிந்ததும் தண்ணீர் திறக்கப்படுவது குறித்த விவரங்களை அமைச்சர்கள் கேட்டறிந்தனர். தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து, விவசாயிகள், பொதுமக்களும் தெரியப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை