பி.ஏ.பி., கிளைக்கால்வாய் மடை உடைந்து பாதிப்பு
உடுமலை; உடுமலை அருகே, பி.ஏ.பி., கிளைக்கால்வாய் மடையில் உடைப்பு ஏற்பட்டதால், பாசன நிலங்களுக்குள் நீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., 3ம் மண்டல பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.இதில், உடுமலை கால்வாயிலிருந்து, ஜல்லிபட்டி ஓனாக்கல்லுார் கிளைக்கால்வாய் மற்றும் மடைகள் முறையான பாராமரிப்பு மேற்கொள்ளாததால், 3.14 வது மடை திடீர் உடைப்பு ஏற்பட்டு, விளை நிலங்களுக்குள் நீர் புகுந்தது.தென்னை மற்றும் விளை நிலங்களுக்குள் சேதம் ஏற்படுத்தியது. வறட்சி நிலவி வரும் நிலையில், பெருமளவு நீர் வீணாகியதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.