உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பி.ஏ.பி., திட்ட தின விழா

பி.ஏ.பி., திட்ட தின விழா

பொங்கலுார்; தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் பி.ஏ.பி., திட்ட தினம் பொங்கலுார் ஒன்றியம், அவிநாசிபாளையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. திட்டத்தை கொண்டு வருவதற்கு காரணமான முன்னாள் முதல்வர் காமராஜர், முன்னாள் மகாராஷ்டிரா கவர்னர் சி.சுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ.பழனிசாமி கவுண்டர், பொறியாளர் அனந்தராவ் ஆகியோருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம், பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன், விவசாயிகள், சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ