உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முறைகேடு ஆசாமிகளிடம் கவனம்: மாணவருக்கு அறிவுரை

முறைகேடு ஆசாமிகளிடம் கவனம்: மாணவருக்கு அறிவுரை

திருப்பூர்: 'நீட் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள், தவறான வழிகாட்டுதலால் ஏமாற்ற நினைக்கும், முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும்,' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.நாடு முழுதும் மே, 4ம் தேதி இளநிலை 'நீட்' தேர்வு நடக்கவுள்ளது. அரசு, தனியார் மருத்துவ கல்லுாரிகளின் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு, சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளில் இணைய இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.,) நடத்தும் இத்தேர்வு எழுத உள்ள விண்ணப்பதாரர்களுக்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.அதில், 'தங்களிடம் 'நீட்' வினாத்தாள் இருப்பதாக, அங்கீகரிக்கப்படாத இணையதளம், சமூக வலைதளங்களில் தகவல் வந்தாலோ, என்.டி.ஏ., மற்றும் அரசு அதிகாரிகள் போல யாராவது பேசினால், https://nta.ac.inஎன்ற இணைதளத்தில் மே, 4ம் தேதி மாலை, 5:00 மணி வரை புகார் தெரிவிக்கலாம்.விரிவான விசாரணை நடத்தப்பட்டு, சம்மந்தப்பட்டவர் தவறு செய்தது உறுதியானால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறான வழிகாட்டுதலால் ஏமாற்ற நினைக்கும், முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து தேர்வர்கள் கவனமாக இருக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தகவலை, மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி