உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவரை, பீர்க்கன் விலை உயர்வு கேரட், பாகல் விலை சரிவு

அவரை, பீர்க்கன் விலை உயர்வு கேரட், பாகல் விலை சரிவு

திருப்பூர் : திருப்பூர் காய்கறி மார்க்கெட்டில், அவரை, பீர்க்கன், தேங்காய் விலை நடப்பு வாரம் உயர்ந்துள்ளது; கேரட், பாகற்காய், முருங்கை விலை குறைந்துள்ளது.திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில், நடப்பு வாரம் கேரட், பாகற்காய் விலை கிலோவுக்கு பத்து ரூபாய் குறைந்துள்ளது. அதேநேரம், தேங்காய் விலை குறையாமல் கிலோ, 60 ரூபாயில் தொடர்கிறது. ஒரு தேங்காய், 22 - 28 ரூபாய். அவரை, பீர்க்கன்காய் முறையே, 70 மற்றும், 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.காய்கறிகள் விலை நிலவரம் (ஒரு கிலோ - ஒரு ரூபாயில்):கத்தரி, முதல் ரகம் - 60, இரண்டாம் ரகம் - 30. வெண்டைக்காய் - 30, தக்காளி - 16, பச்சை மிளகாய் - 50, புடலங்காய் - 30, அவரைக்காய் - 70, கொத்தவரங்காய் - 30, பீர்க்கன்காய் - 60, சுரைக்காய் - 15, பாகற்காய் - 50, முள்ளங்கி - 30, வாழைக்காய் - 30, சேனைக்கிழங்கு - 50, எலுமிச்சை - 110, அரசாணிக்காய் - 15, பூசணிக்காய் - 18, சின்ன வெங்காயம் - 60, பெரிய வெங்காயம் - 25, உருளைக்கிழங்கு - 45, முட்டைகோஸ் - 20, கேரட் - 50, பீட்ரூட் - 25, ஊட்டி பீட்ரூட் - 55, பீன்ஸ் - 60, காலிபிளவர் - 40, மேராக்காய் - 35, இஞ்சி - 55, முருங்கைக்காய் - 70, பப்பாளி - 30 ரூபாய். தேங்காய் கிலோ, 60 ரூபாய், வாழைத்தண்டு (ஒன்று) - 10, வாழைப்பூ (ஒன்று) - 12.

பள்ளிகள் திறப்புக்கு பின்

காய்கறி விற்பனை சுறுசுறுப்புபள்ளிகள் திறப்புக்கு பின் தற்போது காய்கறி விற்பனை சுறுசுறுப்பாக உள்ளது. மொத்த காய்கறி கடை, மளிகை கடைகளுக்கு கூடுதலாக காய்கறிகளை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். திங்கள் - வெள்ளி வரும் காய்கறிகள் அன்றைய நாளே விற்றுத்தீர்ந்து விடுகிறது. சனி, ஞாயிறு மட்டும் காய்கறி விற்பனை சற்று மந்தமாகிறது. தற்போதைய விலை, மார்க்கெட் நிலவரம் அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருப்பதால், நிறைய காய்கறிளை விரும்பி வாங்கி செல்கின்றனர். தக்காளி விலை உயரும் வரை காய்கறி விலை இப்படித்தான் இருக்கும்.- உழவர் சந்தை அலுவலர்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை