உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறந்த போலீஸ் ஸ்டேஷன்

சிறந்த போலீஸ் ஸ்டேஷன்

திருப்பூர்: தமிழகத்தில் மாநகரம், மாவட்டத்தில் உள்ள ஸ்டேஷன்கள் வாரி-யாக ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு, வழக்குகளின் நிலை, கோப்புகள் பராமரிப்பு, குற்ற தடுப்பு, நடவடிக்கை என, பல்-வேறு விஷயங்களை கணக்கில் கொண்டு, சிறந்து விளங்கும் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டு குடியரசு தினத்தன்று விருது வழங்கப்படுவது வழக்கம்.கடந்த 2023ம் ஆண்டுக்கான சிறந்த போலீஸ் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யும் பட்டியலில், திருப்பூர் மாநகரில் உள்ள திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் இரண்டாவது இடத்தை பிடித்தது.இதற்கான விருதை இன்ஸ்பெக்டர் உதயகுமார் சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் ஸ்டாலினிடம் பெற்று கொண்டார். இன்ஸ்பெக்டர் உதயகுமார் கூறுகையில், 'மேலும் திறம்படவும், உத்வேகத்துடனும் நாங்கள் பணிபுரிய இது துணை புரியும்'' என்றார். கடந்த 2020ம் ஆண்டில் திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் முதலிடம், 2022ல், திருப்பூர் வடக்கு முத-லிடம் பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை