உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பகவத் கீதை சொற்பொழிவு திருப்பூரில் துவங்கியது

பகவத் கீதை சொற்பொழிவு திருப்பூரில் துவங்கியது

திருப்பூர்; திருப்பூரில், ஸ்வாமினி மஹாத்மாநந்த ஸரஸ்வதி நிகழ்த்தும் ஸ்ரீமத் பகவத் கீதை தொடர் ஞான யஜ்ஞம் நேற்று துவங்கியது; ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் தொடர் சொற்பொழிவு நடைபெறும்.திருப்பூர், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், கலை பண்பாட்டு மையம் திருவருள் அரங்கில், ஸ்ரீ மத் பகவத் கீதை, தொடர் ஞான யஜ்ஞம் நேற்று துவங்கியது.ஸ்வாமினி மஹாத்மாநந்த ஸரஸ்வதி, சொற்பொழிவாற்றினார். நேற்று மாலை, 6:00 முதல், 7:00 மணி வரை நடந்த சொற்பொழிவில் பலரும் பங்கேற்றனர்.முன்னதாக சாய் கிருஷ்ணா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ் மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு வாரமும் வியாழன் தோறும், இந்த தொடர் சொற்பொழிவு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை