மேலும் செய்திகள்
மின்வாரிய தொழிலாளர் மாவட்ட செயற்குழு கூட்டம்
07-May-2025
அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாவட்ட பாரதிய மஸ்துார் சங்கத்தின் செயற்குழு கூட்டம் அனுப்பர்பாளையம் காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கூட்டத்துக்கு, மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன், தலைமை வகித்தார். மாவட்ட பொருளா ளர் சீனிவாசன், முன்னிலை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ், பேசினார். திருப்பூர் மாவட்டத்தில், அதிக உறுப்பினர்களை சேர்ப்பது, பனியன் மற்றும் பாத்திர தொழிலாளர்களை நல வாரியத்தில் சேர்ப்பது, அடுத்த மாதம், 22ம் தேதி மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மாநில துணைத்தலைவர் பிரபு தலைமையில் 500 பேர் கலந்து கொள்வது. என முடிவு செய்யப்பட்டது.மாவட்ட பிரதிநிதி சதீஷ், கைத்தறி மாநில நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், சந்திரசேகர், பனியன் சங்க செயலாளர் விக்னேஷ்வரன் பிரபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
07-May-2025