உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சைக்கிள், மராத்தான்; திறன் காட்டலாம்

சைக்கிள், மராத்தான்; திறன் காட்டலாம்

திருப்பூர்; முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் விழாவையொட்டி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில், 2025, ஜன., 4ம் தேதி காலை 6:00 மணிக்கு 13, 15, 17 வயது பிரிவினருக்கான சைக்கிள் போட்டி நடக்கிறது. 13 வயது மாணவர் மற்றும் மாணவியர் முறையே, 15 மற்றும், 10 கி.மீ.,15, 17 வயது மாணவ, மாணவியர் முறையே, 20 மற்றும், 15 கி.மீ., சைக்கிள் ஓட்ட வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது பள்ளி முதல்வரிடம் வயது சான்றிதழ் பெற்று வர வேண்டும்; ஆதார் அட்டை ஜெராக்ஸ் சமர்ப்பிக்க வேண்டும். அவரவர் சைக்கிள் கொண்டு வர வேண்டும்.வழித்தட விபரம், போட்டி துவங்கும் முன் தெரிவிக்கப்படும். முதலிடம் பெறுவோருக்கு, 5,000 ரூபாய்; இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெறுவோர் முறையே, 3,000 மற்றும், 2,000 ரூபாய்; நான்கு முதல் பத்து இடங்களுக்குள் பெறுவோருக்கு தலா, 250 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்.வரும் 5ம் தேதி, சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் துவங்கி, வஞ்சிபாளையம் வரை மராத்தான் போட்டி நடக்கிறது.17 முதல், 25 வயது, அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். 25 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு, 10 கி.மீ., பெண்களுக்கு, ஐந்து கி.மீ., 17 வயது முதல், 25 வயது வரை உள்ள ஆண்களுக்கு ஆறு கி.மீ., பெண்களுக்கு, ஐந்து கி.மீ.,போட்டிகளில் கலந்து கொள்பவர் மருத்துவரின் தகுதிச்சான்றிதழ் பெற வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது பள்ளி முதல்வரிடம் வயது சான்றிதழ் பெற்று வர வேண்டும்; ஆதார் அட்டை ஜெராக்ஸ் சமர்ப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை