உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காதலியை மிரட்டிய பீகார் வாலிபர் கைது

காதலியை மிரட்டிய பீகார் வாலிபர் கைது

திருப்பூர்; பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் கம்ரூலு, 22. இவர் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.இவருக்கு, சத்தீஷ்கரை சேர்ந்த, 22 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கருத்து வேறுபாட்டால், இளம்பெண் கம்ரூலு உடன் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனால், கம்ரூலு, காதலியுடன் எடுத்த போட்டோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.அதன்பின் ஆபாசமாக சித்தரித்த போட்டோவை பதிவு செய்வேன் என, மிரட்டினார்.இதையறிந்த பெண் கொங்கு நகர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். பீகாரில் இருந்து கம்ரூலுவை திருப்பூர் வரவழைத்த போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி