உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பா.ஜ. பொதுக்கூட்டம்: தொண்டர்கள் திரண்டனர்

பா.ஜ. பொதுக்கூட்டம்: தொண்டர்கள் திரண்டனர்

அவிநாசி: அவிநாசி, மேற்கு ரத வீதியில், பா.ஜ., சார்பில், 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில், பொதுக்கூட்டம் நடந்தது. கோவை புறநகர் மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். துணை தலைவர் சண்முகம் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் கதிர்வேல், ஜெகநாதன், மாவட்ட பொது செயலாளர் பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், மாநில பொதுச் செயலாளர்கள் முருகானந்தம், கருப்பு முருகானந்தம், மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, பெருங்கோட்ட அமைப்புச் செயலாளர் பாலகுமார், மாவட்ட துணைத்தலைவர் கணியாம்பூண்டி செந்தில் உட்பட பலர் பேசினர். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்புரையாற்றினார். மண்டல் தலைவர்கள் பிரேமா, நந்தினி, பிரபுரத்தினம், சண்முகபாபு உட்பட அவிநாசி வட்டார நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை