உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பா.ஜ., முப்பெரும் விழா; 1008 திருவிளக்கு பூஜை

பா.ஜ., முப்பெரும் விழா; 1008 திருவிளக்கு பூஜை

அவிநாசி; அவிநாசி, கொங்கு கலையரங்கில், நகர பா.ஜ., சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் விழா, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நுாற்றாண்டு விழா, பிரதமர் மோடியின் கீழ் பா.ஜ., 11ம் ஆண்டு சாதனை விளக்க பிரசார பயணம் துவக்க விழா ஆகிய முப்பெரும் விழாவை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கோவை புறநகர் மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். அவிநாசி திருப்புக் கொளியூர் வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சி தாச சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் சண்முகம் முருகேசன், பொருளாளர் டாக்டர் சுந்தரன், மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் கதிர்வேல், மண்டல தலைவர்கள் பிரபு ரத்தினம், பிரேமா, நந்தினி, நகர தலைவர்கள் ரமேஷ், சண்முகபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மகளிர் அணி தலைவி கவிதா ஸ்ரீகாந்த், மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநிலச் செயலாளர்கள் நந்தகுமார், மலர்க்கொடி, மீனாட்சி நித்யசுந்தர், மாநில மகளிர் அணி துணைத் தலைவி வித்யா ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 1008 திருவிளக்கு பூஜை நிகழ்ச்சியை மகளிர் அணி பொறுப்பாளர் பிரபாவதி ஒருங்கிணைத்தார். மாவட்ட செயலாளர் கஸ்துாரி பிரியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !