பீஸ்ரேட் தொழிலாளருக்கும் போனஸ்
திருப்பூர்; 'பீஸ்ரேட்' தொழிலாளருக்கும் போனஸ் வழங்க வேண்டுமென, அண்ணா பனியன் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா பனியன் தொழிலாளர் சங்க செயலாளர் கண்ணப்பன், தொழில் அமைப்புகளுக்கு அனுப்பியுள்ள கடிதம்: திருப்பூரில் உள்ள பனியன் தொழிலாளர்களுக்கு, கடந்த ஆண்டை விட அதிகமாக தீபாவளி போனஸ் வழங்கப்பட வேண்டும். பண்டிகைக்கு 10 நாட்கள் முன்னதாகவே போனஸ் வழங்க வேண்டும். தொழிலாளர் நலனுக்காக, அண்ணா தொழிற்சங்கம் எப்போதும் பாடுபடும். அதேபோல், பின்னலாடை நிறுவனங்களிலுள்ள 'பீஸ்ரேட்' தொழிலாளர்களுக்கும் கட்டாயம் போனஸ் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.