உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குண்டும், குழியுமாக ரோடுகள்; மழை நீர் தேங்குவதால் பாதிப்பு

குண்டும், குழியுமாக ரோடுகள்; மழை நீர் தேங்குவதால் பாதிப்பு

உடுமலை : உடுமலை நகர பகுதியிலுள்ள ரோடுகளில், மழை நீர் தேக்கம் காரணமாகவும், முறையான பராமரிப்பு இல்லாததாலும், பெரும்பாலான ரோடுகள், குண்டும், குழியுமாக மாறி காணப்படுகின்றன.உடுமலையிலிருந்து பழநி மற்றும் பொள்ளாச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ரோடு, பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல், முழுவதுமாக சேதமடைந்துள்ளது.இதனால், வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர். மழை காலங்களில், குழிகளில் நீர் தேங்கியிருப்பது தெரியாமல், வாகனங்களில் வருவோர் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.அதே போல், நகர எல்லை வரை, பழநி ரோடு மற்றும் கொழுமம் ரோட்டில், பல இடங்களில் ரோடுகள் சேதமடைந்துள்ளன.மேலும், தாராபுரம் ரோட்டில், சிவசக்தி காலனி வரை, பல இடங்களில் பெரிய அளவிலான குழிகள் ஏற்பட்டுள்ளன.திருப்பூர் ரோடு, ராஜேந்திரா ரோடு, தளி ரோடு என நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள அனைத்து ரோடுகளும், பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக மாறியுள்ளன.குண்டும், குழியுமான இந்த ரோடுகளால், போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில், மழை காலங்களில், குழிகளில் மழை நீர் தேங்கி, பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.எனவே, தேசிய நெடுஞ்சாலை மற்றும் உடுமலை, மடத்துக்குளம் உபகோட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குண்டும், குழியுமாக மாறியுள்ள ரோடுகளை உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி