உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலையில் எரிந்த கார்

சாலையில் எரிந்த கார்

பல்லடம்; திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தைச் சேர்ந்தவர் சைபுர் ரகுமான், 38, தனியார் நிறுவன ஊழியர். நேற்று காலை, வீட்டிலிருந்து, 'மாருதி ஜென்' காரில் கோவை புறப்பட்டார். பல்லடம் அருகே, புள்ளியப்பம்பாளையம் வரும்போது, எரிவாயு காலியாகி கார் நின்றது.சைபுர் ரகுமான், பெட்ரோலுக்கு மாற்றி, காரை இயக்க முயன்றபோது, கார் தீப்பிடித்தது.தீயணைப்பு படையினர் வருவதற்குள், காரில் பரவிய தீ, கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. இதில் கார் முழுமையாக கருகி நாசமானது.பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

W W
டிச 23, 2024 09:04

கேஸ் கன்வெர்ட்டரில் பாதுகாப்பு இல்லாமல்,அமைப்பது,கேஸ் லீக் டிடெக்டரும் கிடையாது, சில இடங்களில் குவாலிபிட் ஆள்களும் கிடையாது. அதனால் இதுமாதிரி தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. மக்கள் மிகவும் ஜக்கிரதையாக கையாள வேண்டும்.


சமீபத்திய செய்தி