உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் ஸ்டாண்டில் குடிநீர் இல்லாமல் தவிப்பு

பஸ் ஸ்டாண்டில் குடிநீர் இல்லாமல் தவிப்பு

உடுமலை; பஸ் ஸ்டாண்டில், குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருவது குறித்து, உடுமலை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை பஸ் ஸ்டாண்டுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். தொலைதுாரம் மற்றும் கிராமப்புற பஸ்களுக்கு காத்திருக்கும் மக்களுக்கு, பஸ் ஸ்டாண்டில் குடிநீர் வசதி இல்லை.சுத்திகரிப்பு கருவி செயல்படாத நிலையில், ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த தொட்டிகளும் மாயமாகியுள்ளது. இதனால், மக்கள் மிகுந்த அவதிப்படுகின்றனர்.நகராட்சி நிர்வாகம், பஸ் ஸ்டாண்டில், மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ