உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பதிக்கு பஸ் நிறுத்தம்

திருப்பதிக்கு பஸ் நிறுத்தம்

திருப்பூரிலிருந்து திருப்பதிக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் இயக்கப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு இங்கு புறப்படும் பஸ், மறுநாள் அதிகாலை, 5:00 மணிக்கு திருப்பதி சென்றடைந்தது.ஒரு நாள் விட்டு ஒரு நாள், வாரத்தின் 3 நாள் இயக்கப்பட்டது. கடந்த, நவ., 15ம் தேதிக்கு பின், ஒரு மாதமாக இது வருவதில்லை. திருப்பூரில் இருந்து இயக்கப்பட்ட பஸ், கோவையில் இருந்து அவிநாசி வழியாக திருப்பதிக்கு இயக்கப்படுகிறது.ஏற்கனவே கோவையில் இருந்து திருப்பதிக்கு 2 பஸ் இயங்கும் நிலையில், திருப்பூரில் இருந்து இயங்கிய பஸ்சும், கோவைக்கு மாற்றப்பட்டுள்ளது. பக்தர்கள் தவிக்கின்றனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ