உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நடு ரோட்டில் நின்ற பஸ் போக்குவரத்து பாதிப்பு

நடு ரோட்டில் நின்ற பஸ் போக்குவரத்து பாதிப்பு

பல்லடம் : திருப்பூரில் இருந்து- உடுமலை செல்லும் அரசு பஸ் ஒன்று, நேற்று காலை பல்லடம் வந்தது.பஸ் ஸ்டாண்டில் பயணிகளை ஏற்றிக்கொண்டு, உடுமலை நோக்கி புறப்பட்டது. பல்லடம் நால்ரோடு சிக்னல் வரும்போது, பஸ், திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது.ஓட்டுநர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் தோல்வியடைந்தது. போக்குவரத்து போலீசார் வாகனங்களை எவ்வாறு மாற்றி அனுப்புவது என்று தெரியாமல் தவித்தனர்.பஸ் பழுதானதன் காரணமாக, பயணிகள் இறக்கி விடப்பட்டு, மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். பொதுமக்களின் உதவியுடன், பழுதான பஸ், அங்கிருந்து சிறிது துாரம் நகர்த்தி நிறத்தப்பட்டது. சிறிது நேரம் கழித்து, பழுது நீக்க வேண்டி, பஸ், அங்கிருந்து பல்லடம் போக்குவரத்து பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.நால்ரோடு சிக்னலின் நடுப்பகுதியில் பஸ் நின்றதால், மங்கலம் ரோட்டுக்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு தடங்கல் ஏற்பட்டது. இதனால், நால்ரோடு சிக்னலில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி