உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு

கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர்; பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற, மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிக்கை: இதர பிற்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர் மரபின மாணவர்களுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் படிக்கும், தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், நடப்பு 2025 - 26 கல்வியாண்டுக்கான, தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் பயன்பெற, பெற்றோரின் ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு கீழ் இருக்கவேண்டும். தகுதியுள்ள மாணவர்கள், இம்மாதம் 15 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். கல்வி நிறுவனங்கள், வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சரிபார்த்து முடிக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர், https://scholarships.gov.inஎன்கிற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில், 2025 - 26ம் ஆண்டுக்கான விண்ணப்பத்தை பெற்று, புதுப்பித்துக்கொள்ளவேண்டும். புதிதாக விண்ணப்பிப்போர், ஒன்பது, பிளஸ்2 வகுப்புகளில், பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர், தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில், தங்கள் விவரங்களை அளித்து, பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை