மேலும் செய்திகள்
சணல் பொருள் தயாரிப்பு பயிற்சி நாளை துவக்கம்
05-Oct-2025
திருப்பூர்: திருப்பூர் கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குநர் சதீஷ்குமார் அறிக்கை: பயிற்சி மையம் சார்பில், தற்போது, பிளம்பிங், பாத் பிட்டிங்ஸ் மற்றும் சானிட்டரி பணிகளுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கியுள்ளது. முப்பது நாள் முழு நேர பயிற்சி வகுப்புகள். இதில் எழுதப் படிக்கத் தெரிந்த, 18 முதல் 45 வயதுக்குட்பட்ட, ஆண், பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சிக்கு எந்த கட்டணமும் இல்லை. முற்றிலும் இலவசம். ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது. பயிற்சியின் போது, காலை- மற்றும் மாலை தேநீர்; உணவு இலவசம். பயிற்சி முடிவில் மத்திய அரசின் அனுமதி பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் சுய தொழில் துவங்க வங்கி கடன் பெற வழிகாட்டப்படும். பயிற்சியில் சேர, கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், முதலிபாளையம் பிரிவு, காங்கயம் ரோடு, திருப்பூர், என்ற முகவரிக்கு நேரில் வரவும்.விவரங்களுக்கு 94890 - 43923, 99525 - 18441 எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
05-Oct-2025