உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலை தடுப்பில் மோதியதில் தீப்பிடித்த கார்: 6 பேர் தப்பினர்

சாலை தடுப்பில் மோதியதில் தீப்பிடித்த கார்: 6 பேர் தப்பினர்

பொங்கலுார்; பொங்கலுார், என்.என்.புதுாரை சேர்ந்த குமார், தனது நண்பர்கள் ஐந்து பேருடன், நேற்று முன்தினம் இரவு காரில் பொங்கலுாரில் இருந்து பல்லடம் சென்றனர். பின், மீண்டும் பொங்கலுார் திரும்பிக்கொண்டிருந்தனர். பொங்கலுார், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வந்தபோது, கார் நிலை தடுமாறி சாலை தடுப்பில் மோதி தீ பிடித்தது. இதில் பயணித்த ஆறு பேரும் உயிர் தப்பினர். பல்லடம் தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை