உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கார் கவிழ்ந்தது; 4 பேர் காயம்

கார் கவிழ்ந்தது; 4 பேர் காயம்

தாராபுரம்; தாராபுரத்தில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், நான்கு பேர் காயமடைந்தனர்.ஊட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 50, இவரது தாய் லோகேஸ்வரி, 62, சாந்தகுமாரி, 60, சஸ்வந்த், 12 ஆகியோர் காரில் நேற்று அதிகாலை பழநிக்கு சென்று தரிசனம் செய்து விட்டு தாராபுரம் வழியாக திரும்பி கொண்டிருந்தனர்.குப்பண்ணன் கோவில் அருகே வந்த போது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த தடுப்பு கம்பிகளை உடைந்து கொண்டு வேப்ப மரத்தில் மோதி கவிழ்ந்தது. காரில் வந்த, நான்கு பேரும் காயமடைந்தனர். அவர்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ