உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இருதய சிகிச்சை ஆலோசனை முகாம்

இருதய சிகிச்சை ஆலோசனை முகாம்

திருப்பூர், : ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி, திருப்பூர் செஸ்ட் அண்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சென்னை ஹார்ட்ஸ் பார் ஹார்ட்ஸ் டிரஸ்ட் சார்பில், இலவச இருதய சிகிச்சை ஆலோசனை முகாம், 60 அடி ரோடு, குமரானந்தபுரம், டி.சி.எச்., மருத்துவமனையில் நடந்தது.ரோட்டரி (தேர்வு 2026 - 27) மாவட்ட கவர்னர் பூபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். டி.சி.எச்., மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பொம்முசாமி முன்னிலை வகித்து, ஒருங்கிணைத்தார். இருதய அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் (சென்னை) ஸ்ரீமதி பங்கேற்றவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினார். காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை நடந்த முகாமில், 187 பேர் பங்கேற்றனர். அவர்களில், 40 பேர் உயர்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை