மேலும் செய்திகள்
வேகமாக வந்த ஸ்கூட்டர் மோதி முதியவர் பலி
17-Jul-2025
திருப்பூர்; வீட்டை ஆள்மாறாட்டம் செய்து விற்ற ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருப்பூர், எம்.எஸ்., நகர், கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஆனந்தன், 56; பனியன் தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா, 50. தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில், ஆனந்தன் பெயரில் திருமுருகன்பூண்டியில் உள்ள, 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டை மனைவி விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக, அவிநாசி சார்-பதிவாளர் அலுவலகத்தில் ஆனந்தன் விசாரித்தார். அதில், மனைவி சங்கீதா, கணவர் ஆனந்தன் பெயரில், வேறு ஒருவரை ஆள்மாறாட்டம் செய்து, ஜெகதீஷ்குமார் என்பவருக்கு வீட்டை விற்றது தெரிந்தது. இதுகுறித்து ஆனந்தன், கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். போலி ஆவணம் கொண்டு, ஆள்மாறாட்டம் செய்து வீட்டை விற்பனை செய்த மனைவி சங்கீதா, ஜெகதீஷ்குமார், உடந்தையாக இருந்த சபாபதி, முத்துப்பாண்டி, உதயகுமார் என, ஐந்து பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
17-Jul-2025