உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 45 நாளுக்குள் பண பட்டுவாடா நடைமுறை! தொழில்துறையினர் கையாளப்போவது எப்படி?

45 நாளுக்குள் பண பட்டுவாடா நடைமுறை! தொழில்துறையினர் கையாளப்போவது எப்படி?

திருப்பூர்;குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு, உற்பத்தி செய்து அனுப்பிய பொருட்களுக்கான பணத்தை பெறுவது குதிரை கொம்பாக மாறிவிடுகிறது.பெரும்பாலான நேரங்களில், பணம் தாமதமாக கிடைக்கும்; சில நேரங்களில், வரவேண்டிய பணம் பெற முடியாத நிலையும் உருவாகிறது.மத்திய அரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாக்கும் வகையில், கடந்த பட்ஜெட்டில், அனுப்பும் பொருட்களுக்கான பணத்தை, 45 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்று அறிவித்தது.உற்பத்தியாளரும், விற்பனையாளரும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் என பதிவு செய்திருந்தால், பரஸ்பரம் பேசி, 45 நாட்களுக்குள் பண பரிவர்த்தனை செய்து கொள்ள, தனியே ஒப்பந்தம் செய்துகொள்ளும் வசதியும் இருந்தது. இந்தாண்டு தாக்கலாகியுள்ள, மத்திய அரசின், இடைக்கால பட்ஜெட்டில், விற்பனை செய்த சரக்கிற்கான தொகை, 45 நாட்களுக்குள் பட்டுவாடா செய்ய வேண்டும். லாபத்துக்கு மட்டும் உற்பத்தியாளர் வருமான வரி செலுத்துவார்.விற்பனை செய்த ஆடைக்கான தொகை, 45 நாட்களுக்குள் வராதபட்சத்தில், வரும் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு நிலுவையில் உள்ள தொகை, வருமானம் என்று கருதி, வருமான வரி செலுத்த நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு நடவடிக்கை, தொழில்களை பாதுகாப்பாக இருந்தாலும், முதல் இரண்டு ஆண்டுகளுக்கு கடும் சோதனையை சந்திக்க நேரிடும் என, தொழில்துறையினர் கவலை அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ