உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாடுகளுக்கு அம்மை நோய்; கால்நடைத்துறை அறிவுரை

மாடுகளுக்கு அம்மை நோய்; கால்நடைத்துறை அறிவுரை

உடுமலை; மழைக்காலம் நிலவி வரும் நிலையில், கறவை மாடுகளுக்கு அம்மை நோய் பரவி வருகிறது என, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர். கால்நடைத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடத்தி அம்மை நோயை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறியதாவது: தற்போது, ஆங்காங்கே மாடுகளுக்கு அம்மை நோய் தென்படுகிறது; மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதால், நோய் வீரியத்துடன் இல்லை.இருப்பினும், அம்மை நோய் குறித்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அளிக்கும் தகவல் அடிப்படையில், அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர்கள், அவற்றுக்கு சிகிச்சை வழங்கி வருகின்றனர்.மாடுகளுக்கு, அம்மை நோய் அறிகுறி தென்பட்டால், உடனடியாக அருகேயுள்ள கால்நடை மருத்துவரிடம் தகவல் தெரிவித்து, சிகிச்சை வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை