உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சந்தை ரோட்டில் கால்நடை உலா: வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு

சந்தை ரோட்டில் கால்நடை உலா: வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு

உடுமலை: உடுமலை உழவர் சந்தை ரோட்டில், கால்நடைகளை விதிமீறலாக நடமாட விடுவதால், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.உடுமலை சுற்றுப்பகுதி பல்வேறு கிராமங்களிலிருந்தும், விவசாயிகள் உழவர் சந்தையில் காய்களை சந்தைப்படுத்துகின்றனர். சராசரியாக, 60க்கும் மேற்பட்ட கடைகள் உழவர் சந்தையில் உள்ளன.அதிகாலை துவங்கி, காலை, 10:00 மணி வரை காய்கள் விற்பனை நடக்கிறது. மீதமாகும் காய்கறி கழிவுகள் சந்தைக்கு வெளியில் வைக்கப்படுகிறது. காய்கறி கழிவுகளை மேய்வதற்கு நாள்தோறும் கால்நடைகள் வந்துவிடுகின்றன.அவை கழிவுகளை மேய்வதுடன், ரோட்டிலும் விதிமுறை மீறி சுற்றி திரிவதால் வாகன ஓட்டுநர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.ரோட்டில் வாகனங்கள் வேகமாக வரும் சமயங்களில், கால்நடைகள் மிரண்டு போய் ஓடுவதால் வாகன ஓட்டுநர்களும் தடுமாறி வாகனங்களை நிறுத்த முடியாமல் கீழே விழுகின்றனர்.பரபரப்பான காலை நேரங்களில், இவ்வாறு கால்நடைகள் இடையூறாக செல்வதை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசார் கால்நடைகளின் உரிமையாளர்களை எச்சரிக்க வேண்டுமென, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை