அடுக்குமாடி குடியிருப்பில் சிசிடிவி கேமரா அமைப்பு
அனுப்பர்பாளையம்; தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் திருப்பூர் அடுத்த நெருப்பெரிச்சலில் திருக்குமரன் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.அதன் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில், பாதுகாப்பு நலன் கருதி, 19 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதன் துவக்க விழா நடைபெற்றது. விழாவில், திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ பங்கேற்று துவக்கி வைத்து, சிசிடிவி-ன் பயன்கள் குறித்தும், குற்ற சம்பவங்கள் தடுப்பு விழிப்புணர்வு குறித்தும் பேசினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு நூலகம் அமைத்து புத்தகம் வழங்குவதற்கு உண்டான முயற்சிகள் செய்து தருவதாக உறுதியளித்தார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் முத்துகுமார், துணை தலைவர் ஐயப்பன், பொருளாளர் மார்க்கேஸ்வரபாண்டியன், துணை செயலாளர் சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.