உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னரே தலைவர் நியமனம்; கட்சி சீரமைப்பு கூட்டத்தில் முன்னாள் எம்.பி. பேச்சு

 நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னரே தலைவர் நியமனம்; கட்சி சீரமைப்பு கூட்டத்தில் முன்னாள் எம்.பி. பேச்சு

திருப்பூர்: 'தமிழகத்தில் காங்., கட்சியை வலுப்படுத்தும் வகையில், மாவட்டம் வாரியாக புதிய நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது. நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னரே மாவட்ட தலைவர் நியமிக்கப்படுவர்,' என்று, முன்னாள் எம்.பி. அசோக் தன்வார் தெரிவித்தார். திருப்பூர் மாவட்ட காங். கட்சியில் மாவட்ட அளவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதுதொடர்பாக கட்சி நிர்வாகி களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்பட உள்ளது. இதற்கான மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. அசோக் தன்வார் நேற்று திருப்பூர் வந்தார். திருப்பூர் மாநகர் மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பின், அவர் கூறியதாவது: தமிழகத்தில் காங்., கட்சியை வலுப்படுத்தும் வகையில் நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது. கடந்த காலங்களில் மூத்த தலைவர்களின் பரிந்துரையின் பேரில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். தற்போது, நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து நியமிக்க உள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்துக்கும், ஆறு பேர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு, அதில், ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளோம். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையை துவங்கியுள்ளோம். பீஹார் தேர்தலிலிருந்து, தமிழக சட்டசபை தேர்தல் முற்றிலும் மாறுபாடானது. எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில், தமிழக மக்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள். யாருடன் கூட்டணி என்பது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும். இவ்வாறு, அவர் கூறினார். திருப்பூர் வடக்கு மாவட்ட காங்., கமிட்டியின் நீட்டிக்கப்பட்ட மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று ஓட்டலில் நடந்தது. கட்சியின்தமிழக மேலிட பொறுப்பாளர். அசோக் தன்வார் தலைமை வகித்தார். தமிழ்நாடு காங். கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் சுடலையாண்டி முன்னிலை வகித்தார். கட்சியின் மறு சீரமைப்பு குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் கட்சி பொறுப்புகளுக்கான விண்ணப்ப படிவங்களும் வழங்கப்பட்டது. தேசிய செயலாளரும், மாவட்ட தலைவருமான கோபிநாத் பழநியப்பன், மாநில செயலாளர் சித்திக், மாநில செயலாளர் செல்வக்குமார் உள்ளிட்ட மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை